உடம்பெல்லாம் முள்
முள்ளம்பன்றி
மூக்கெல்லாம் கத்தி
காண்டாமிருகம்
தலையெல்லாம் கொம்பு
மாடு
பல்லெல்லாம் வாள்
யானை
வாயெல்லாம் அரிவாள்
கழுகு
கண்ணெல்லாம் துப்பாக்கி
வட அமெரிக்க பல்லி*
தசையெல்லாம் வெடிகுண்டு
மலாய் எறும்பு*
மேற்சொன்ன எல்லா
ஆயுதங்களும் ஒரே
இடத்தில்….
மனிதன் ;