அழகிய சகியே

அவன்:
அழகிய சகியே என் மனம் உனையே தினம் நினைப்பது தெரியாதா?

எனதுயிர் துணையே என் இரு விழியில் வலி இருப்பது புரியாதா?

பெண்ணே உன் கண்ணோரம் என் காதல் பார்க்கின்றேன்
அதை உந்தன் இதழாலே நீ கொஞ்சம் சொல்வாயா
சொல்லாமல் செல்வாயா? சொல்லாமல் கொல்வாயா?

உள்ளே உள்ளே ஏதேதோ ஆகிறேன் – அன்பே
வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
காதல் சொல்ல உன் அருகில் வருகிறேன் – ஆனால்
தயக்கம் கொண்டு நான் மெளனம் கொள்கிறேன்

அவள்:
என்னவன் நீயடா உன் வசம் நானடா
தடை விடை பெற உன் மீது காதல் கொண்டேனடா
உனதன்பாலே சிறகுகள் விரிக்கிறேன் பறக்கிறேன் விண் மேலே

அவன்:
கனவில் நீ காதலி
நிஜத்தில் நீ யாரடி
பதிலென்ன கூறடி
சென்றாய் எனைத் திருடி

நிமிடம் நரகம் ஆக வலியோ சிகரம் போக
துயரம் துடைக்க என்னைச் சேர நீ வா

படம் 7
வெளியீடு 2019
இசை சைதன் பரத்வாஜ்
இயக்கம் நிசார் ஷஃபி
பாடியவர்கள் ஹரிசரண்
வரிகள் நிரஞ்சன் பாரதி