என்னாசை மச்சான்

என்னாசை மச்சான் இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஓயாம நாளும் முத்தமிட்டு சண்ட போடலாமா

ஏ…சின்ன சின்ன பார்வையால
வண்ண வண்ண வானவில்ல
போல வாழ்க்கை மாறிப்போச்சே

உன்னால எல்லாமே

எந்நாளும் நீயும் என் முன்ன வந்து
கொன்னு போடுற இரண்டு இச்சைகொண்ட பச்சைப்புள்ள கண்ணால

வாழும் காலமெல்லாம் உன்
கையைக் கோக்கணும்
நெஞ்சில் சாயணும்
கொஞ்சித் தீர்க்கணும்
ஒன்னா வாழணும்
உன்னில் சேரணும்
உன்ன தாங்கணும்
வேறென்ன வேணும் இது போதும்

உன்னுடைய தோளுல உப்புமூட்டை போகணும்
சின்ன புள்ள போல என்னை நீ கொஞ்சணும்
நாம சேர்ந்திருக்கும் நேரமெல்லாம் சந்தோஷம்
என்னைக் கொல்லாம கொல்லுமே உன் வாசம்
அட உன்னால உன்னால என்னை நானும் மறந்தே போனேன்
உன்ன பாக்க பாக்க
இன்பம் கூடிப் போகுதே நெஞ்சுக்குள்ள
மெல்ல மெல்ல என் காதல் இன்னும் எல்லை மீறுதே

என்னுடைய வீட்டுக்கு உன்ன கூட்டிப் போகுறேன்
ஆசைப்பட்ட வாழ்க்கையெல்லாம் நான் வாழறேன்
நெஞ்சம் இந்த நாளை எண்ணி எண்ணிக் கொண்டாடும்
கூட இல்லாத நேரமோ திண்டாடும்
அட நீ தானே எல்லாமே
வேற என்ன எனக்கு வேணும்
கனா கண்டதெல்லாம் நிசமாக மாறியே போனதென்ன
இன்னும் என்ன
வேற ஏதும் நெஞ்சு கேக்கவில்லையே

படம் 7
வெளியீடு 2019
இசை சைதன் பரத்வாஜ்
இயக்கம் நிசார் ஷஃபி
பாடியவர்கள் மதுஸ்ரீ
வரிகள் நிரஞ்சன் பாரதி