என்றென்றும்

நேரடி ஒளியில் தேவதை இவளோ
மல்லிகை மகளோ
இவள் யாரோ யாரோ

தென்றலின் வடிவில் வீசிடும் புயலோ
பேசிடும் அலையோ
இவள் யாரோ யாரோ

தினமும் புதிதாய் இருப்பாள்
ரோஜா மலராய் சிரிப்பாள்
அழகாய் மயக்கம் கொடுப்பாள்

காலை நிலவாய் தெரிவாள்
சாலை வழியில் வருவாள்
நொடியில் மனதைப் பூப்போல் செய்வாள்

மீனைக் கண்டாலே ஒரு மானாய் உடனே குதிப்பாள்

பூக்கும் ஒரு செடியைத் தன் நெஞ்சில் வளர்ப்பாள்

இவளை ஒரு தடவை பார்த்தாலே உடனே பிடிக்கும்
இதமாய் நம் இதயம் துடிக்கும்

வார்த்தையில் இவளைச் சொல்வது கடினம்
துள்ளுது இதயம் இது ஏனோ ஏனோ

கற்பனை உருவம் அற்புத வடிவம்
சொல்வது சிரமம் இது நியாயம் தானோ

இப்படி ஒருத்தி இருந்ததும் இல்லை
அழகிய தொல்லை ஒரு எல்லை இல்லை

கனவில் அணிலாய் நடப்பாள்
அழகில் அனலாய் கொதிப்பாள்
விழியின் நடுவே குதிப்பாள்

காலை பனிபோல் இருப்பாள்
மாலை நிலவாய் சிரிப்பாள்
அழகாய் உயிரைத் தினந்தோறும் கொல்வாள்

படம் என்றென்றும்
வெளியீடு 2014
இசை தரண்
இயக்கம் சினீஷ்
பாடியவர்கள் நிக்கில் மேத்யூ
வரிகள் நிரஞ்சன் பாரதி