தொட தொட தொட வந்தேனே

அவன்:
தொட தொட தொட வந்தேனே பக்கம் நின்றேனே இதயம் நழுவுதே
கட கட வென உன்னாலே எங்கும் உன்னாலே உலகம் விரியுதே

அவள்:
என் மேலே ஆகாயம் நீயே பறவை ஆகிறேன்
என் கீழே பூலோகம் நீயே அன்பே அன்பே

அவன்:
தித்திக்கும் சந்தோஷம் நீயே மனது தொலையுதே
நெஞ்சுக்குள் சங்கீதம் நீயே நிதம் நிதம்

அவள்:
தடதடவென உன்னாலே நித்தம் என் மேலே ரயிலும் விரையுதே
படபடவென கண்ணாலே உந்தன் கண்ணாலே உயிரும் கரையுதே

அவன்:
கண்ணோடு வண்ணங்கள் நீயே இமைகள் ஜொலிக்குதே
நெஞ்சோடு எண்ணங்கள் நீயே சுகம் சுகம்

அவள்:
என் மண்ணில் ஈரங்கள் நீயே கால்கள் சிலிர்க்குதே
என் சாரல் நேரங்கள் நீயே அன்பே அன்பே

படம் என்றென்றும்
வெளியீடு 2014
இசை தரண்
இயக்கம் சினீஷ்
பாடியவர்கள் ஹரிசரண், ரனினா ரெட்டி
வரிகள் நிரஞ்சன் பாரதி