சலசலசலவென்று

நீரில் இறங்காமல் நீச்சல் வாராது
நீந்தத் தெரிந்தாலே நீ மூழ்கக் கூடாது
காயம் நேராமல் வெற்றி இங்கேது
முட்கள் இல்லாமல் கடிகாரம் ஓடாது

சலசலசலவென்று நதி போல ஓடு

கலகலகலவென்று தோல்வியைக் கொண்டாடு

கிடுகிடுகிடுவென்று நீ முன்னேறு

கடகடகடவென்று வானிலே நீ ஏறு

பல தடை இருந்தாலும் வழிதேடு
நம் வழியினில் தடைகள் சரிபாதி விழுக்காடு
ஒரு சிங்கம் போல நடைபோடு
தினம் வெற்றி என்னும் ராகத்தை நீ பாடு

நெஞ்சில் வந்தாயே என்னைத் தந்தேனே
வாழ்வில் எப்போதும் எல்லாமே நீ தானே
உந்தன் துணையோடு யாவும் வெல்வேனே
நீயும் இல்லாமல் நானில்லை பொன்மானே

ஆடாமல் நீல்லடா வீழாமல் வெல்லடா
புயலாய் அடங்காமல் தினம் ஓடி நீ வாடா
நீ வீரம் கொள்ளடா காயங்கள் தள்ளடா
தீயில் போட்டாலும் பொன்னாக நீ நின்று வெல்லடா வெல்லடா

வழவழவழப்பாக ஒரு சாலை உண்டா
சுறுசுறுசுறுப்பாக ஓட்டமாய் நீ ஓடு
கடகடமுடவென்று ஒரு தாளம் கேட்டால்
சுடச்சுடச்சுடவென்று சங்கீதம் நீ பாடு

வாழ்வில் எப்போதும் தென்றல் வீசாது
புயலைக் கண்டாலும் நீ சாயக்கூடாது
மண்ணை நம்பாமல் வைரம் தோன்றாது
உன்னை நீ நம்பு ஓர் துன்பம் வாராது

உனை முழுவதும்வென்று நீ வாழ்ந்து காட்டு
உன் பயங்களையெல்லாம் மொத்தமாய் தீ மூட்டு
நீ அழுபவன் என்றால் அது அடுக்காது
இந்த அழகிய வாழ்க்கை மறுபடி கிடைக்காது

ஒரு சாதனை செய்ய போராடு
தலை குனிந்து பார்க்க நீயில்லை பலியாடு
நீ பிறந்தது ஏனோ விடைதேடு
துளி வேர்வையின்றி கிடைக்காது சாப்பாடு

மேலும் மேன்மேலும் வெற்றி வந்தாலும்
என்றும் எப்போதும் சரிபாதி உனக்குண்டு
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
எந்தன் வாழ்வோடு எப்போதும் நீயுண்டு

அவமானம் இல்லையேல் வெகுமானம் ஏதடா
உன்னை மிதித்தாலும் முன்னேறி நீ வாடா
சோம்பேறி என்பவன் வாழ்ந்தாலும் கல்லடா
நொடியும் தூங்காமல் வேண்டாமல் நீ சென்று வெல்லடா வெல்லடா

படம் நளனும் நந்தினியும்
வெளியீடு 2014
இசை அஷ்வத்
இயக்கம் வெங்கடேஷ்
பாடியவர்கள் சங்கர் மகாதேவன், சச்சின் வாரி
வரிகள் நிரஞ்சன் பாரதி