மர்மமாய்

அவள்:
மர்மமாய் ஏதோ நெஞ்சின் ஓரம் வந்து நுழையுதே உன்னாலே

அவன்:
அருகிலே உந்தன் வாசம் என்னைக் கொஞ்சம் மயக்குதே தன்னாலே

அவள்:
கண்ணோடு கண்கள் மோதி வார்த்தைகள் காணாமல் போனால் என்ன?

அவன்:
நெஞ்சோடு நெஞ்சம் சேர்ந்து மெளனங்கள் பாஷைகள் ஆனால் என்ன?

அவள்:
இந்த நிலை போதும் போதும்

அவன்:
வேண்டும் வேண்டும் பூவே இன்னும் இன்னும்
கொல்லும் கொல்லும் உன்னைத் தீண்டும் இன்பம்

அவள்:
பக்கம் வந்தால் என்னில் வெட்கம் வெட்கம்
சொக்கும் போதே இதயம் சிக்கும் சிக்கும்

அவள்:
சின்ன சின்ன விழிகளில் என்னை இங்கு பின்னிப்பின்னி கைது செய்கிறாயே
அவன்:
நினைவினில் பலப்பல கனவுகள் வர வர மயக்கம் தருகிறாயே

அவள்:
யாரும் இல்லா அழகிய நேரம் அன்பே
நீயும் நானும் அன்றி யார் தான் இங்கே

அவன்:
உந்தன் நாணம் விடுமுறை கொண்டால் என்ன?
கன்னம் இரண்டை ஒருமுறை தந்தால் என்ன?

அவள்:
இந்த நிலை போதும் போதும்

திக் திக் என்று இரண்டு உள்ளம் துள்ள
தித்திக்காதோ தேகம் காதல் கொள்ள

அவள்:
சொல்லச் சொல்ல சத்தமின்றி மெல்ல மெல்ல இதயத்தைத் திருடிக் கொள்கிறாயே

அவன்:
துறு துறு விழிகளில் சிறு சிறு கலவரம் நூறு தருகிறாயே

அவள்:
முத்தம் சிந்த உந்தன் சட்டம் என்ன?
சித்தம் மொத்தம் வெல்லும் திட்டம் என்ன?

அவன்:
என் பாதை உன் இரு கண் காட்டுமே
என் தேவை உன் இதழ் தான் சொல்லுமே

அவள்:
இந்த நிலை போதும் போதும்

அவன்:
வேண்டும் வேண்டும் பூவே இன்னும் இன்னும்
கொல்லும் கொல்லும் உன்னைத் தீண்டும் இன்பம்

அவள்:
பக்கம் வந்தால் என்னில் வெட்கம் வெட்கம்
சொக்கும் போதே இதயம் சிக்கும் சிக்கும்

படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் (Not yet released)
வெளியீடு -
இசை அஷ்வத்
இயக்கம் சுதர்
பாடியவர்கள் பல்ராம் , சாஷா திரிபாதி
வரிகள் நிரஞ்சன் பாரதி